2011-2020 Unit- 07 Political Science (Past Paper Questions)






2020 Past Paper

 (1) இலங்கையின் ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கு டொனமூர் அரசியலமைப்புச் சீர்த்திருத்தங்கள் வழங்கிய பங்களிப்பினை ஆராய்க.(20 புள்ளிகள்)

2019 Past Paper

(2) இலங்கையின் காலனித்துவ நிலைமாற்றத்தினால் ஏற்பட்ட அரசியல் விளைவுகளை ஆராய்க.(20 புள்ளிகள்)

2018 Past Paper

(3) இலங்கையின் அரசியல்,பொருளாதார,சமூக மாற்றங்களில் கோல்புறூக்-கமரன் சீர்த்திருத்தங்களின் பங்களிப்பை ஆராய்க.(20 புள்ளிகள்)

(4) "இலங்கை ஜனநாயக ஆட்சியில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தினை டொனமூர் சீர்த்திருத்தங்கள் குறித்து நின்றன." ஆராய்க.(20 புள்ளிகள்)


2017 Past Paper

(5) கோல்புறூக்-கமரன் சிபாரிசுகளின் நிறைகளையும் குறைகளையும் அல்லது டொனமூர் யாப்பின் கீழ் தாபிக்கப்பட்ட நிறைவேற்றுக் குழு முறைமையின் நிறைகளையும் குறைகளையும் பகுத்தாய்க.(20 புள்ளிகள்)

2016 Past Paper

(6) "இலங்கையானது நிலமானிய முறையிலிருந்து முதலாளித்துவத்துக்கு மாறுவதற்கான அடித்தளத்தை இட்டது,கோல்புறூக்-கமரன் சீர்த்திருத்தங்களாகும்" நீர் உடன்படுகிறீரா?உமது விடைக்கான காரணங்களை தருக.(20 புள்ளிகள்)

2015 Past Paper

(7) டொனமூர் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றுக் குழு முறைமையின் செயற்பாடு. (10புள்ளிகள்)

2014 Past Paper

(8) 1833 கோல்புறூக்-கமரன் சிபாரிசுகள்  (10புள்ளிகள்)

(9) 1924 மனிங்-டெவன்ஷியர் சீர்த்திருத்தத்தின் பிரதான பண்புகள் (10புள்ளிகள்)

(10) டொனமூர் யாப்பின் கீழ் தேசாதிபதியின் அதிகாரங்கள்,பணிகள் மற்றும் நிலை (10புள்ளிகள்)

2013 Past Paper

(11) கோல்புறூக்-கமரன் ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை குறிப்பிட்டு இலங்கையின் சமூக-பொருளாதார அரசியல் முறைமைகளில் அவை ஏற்படுத்திய தாக்கத்தினை விமர்சன முறையில் பரிசீலிக்குக.

(12) டொனமூர் ஆணைக்குழு முன்வைத்த பின்வரும் இரண்டு சிபாரிசுகள் இலங்கைச் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினை விமர்சன முறையில் பரிசீலிக்குக.

  (அ) சர்வசன வாக்குரிமை

 (ஆ) இனவாரிப் பிரதிநிதித்துவத்தின் ஒழிப்பு 


2012 Past Paper 

(13) "1833 கோல்புறூக்-கமரன் சீர்த்திருத்தங்கள் இலங்கையில் பழைய யுகத்தின் முடிவினைக் குறித்து நின்றதோடு ஒரு புதுயுகத்தை ஆரம்பித்து வைத்தது" உமது விடைக்கான காரணஙகள் தருக. (20 புள்ளிகள்) 

(14) டொனமூர் அரசாங்க முறையோடு தொடர்புபடுத்திப் பின்வருவனவற்றை பரிசீலிக்குக.

  (அ) மந்திரிமார்  சபையும் அரசாங்கத்தின் வகிபங்கும்

 (ஆ) நிறைவேற்றுக்குழு முறைமை

                        (10× 2 = 20 புள்ளிகள்)

2011 Past Paper 

(15) இலங்கையில் பிரித்தானிய குடியேற்ற நாட்டாட்சியின் அரசியல்,பொருளாதார,சமூக விளைவுகளை விமர்சன ரீதியாக பரிசீலிக்குக.(20 புள்ளிகள்)

(16) 1931 இல் டொனமூர் ஆணைக்குழு சர்வசன வாக்குரினையை வழங்கியமையால் ஏற்பட்ட தாக்கங்களைப் பரிசீலிக்குக. (20 புள்ளிகள்)

Post a Comment

2 Comments

  1. Super mashaa allah. Ella watrayum katru irudhiyil thoppawarhalum ullanar. Aanal thiramayaha theriwu seydhi adhatkana meettale ilakkai adayum sirandha wali

    ReplyDelete