Political science Questions With Answer 31/10/2021

 



வினாக்களும் விடைகளும்


அன்பார்ந்த மாணவர்களே! கீழுள்ள வினாக்களையும் விடைகளையும் உங்களது கொப்பியில் எழுதிக்கொள்ளவும்.பிரயோசனமாக அமையும்.


(01) அரசை சமூகத்திலிருந்து வேறுபடுத்தும் காரணிகள்

👉 அரசுக்கு முன் சமூகம் தோன்றியது.

👉அரசு செயற்கையாக உருவாகியிருப்பது,சமூகம் இயற்கையாக உருவாகியிருப்பது.


(02) மனிதர் சட்டத்துக்கு கீழ்படிவதற்கான காரணங்கள்


👉தண்டனை மீதான பயம்.

👉சட்டம் என்பது சட்டபூர்வமானது என்ற நம்பிக்கை.



(03) தற்கால அரசாங்கங்களினால் சட்டத்துறையினை ஒழுங்குபடுத்தும் இரண்டு மாதிரிகள்


👉ஒரு மன்ற மாதிரி

👉இரு மன்ற மாதிரி



(04) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரித்தானிய காலணித்துவத்துக்கு எதிராக தோற்றம் பெற்ற சமூக இயக்கங்கள்


👉 சமய மறுமலர்ச்சி இயக்கம்

👉மது ஒழிப்பு இயக்கம்


(05) 1972 யாப்பில் கீழ் தாபிக்கப்பட்ட விசேட யாப்புசார் தாபனங்கள் இரண்டு தருக.


👉 அரசியல் யாப்பு நீதிமன்றம்


👉அரசாங்க சேவை ஆலோசனை சபை



(06) சமூக ஒப்பந்தக்கோட்பாட்டின் இரு சமூக முறைகள்


👉இயற்கை நிலை சமூகம்

👉சிவில் சமூகம்


(07) கிரேக்க காலத்தில் பின்வரும் கல்விக்கூடங்களில் அரசறிவியலைக் கற்பித்த அரசியல் தத்துவஞானிகளைப் பெயரிடுக.


1. அகடமி - பிளேட்டோ

2. லைஸியம் - அரிஸ்டோடில்


(08) சிவில் சமூகமானது ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் பாதுகாப்பதில் கொண்டுள்ள வகிபாகங்கள் இரண்டினை குறிப்பிடுக.


👉 அரசியல் யாப்பின் காவலனாக தொழிற்படல்.

👉முரண்பட்ட சக்தியாக தொழிற்படல்.


(09) வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்துள்ள அரச மாதிரிகள் பல காணப்படுகின்றன.அவற்றுள் இரண்டினைத் தருக.


👉கோத்திர அரசு

👉கிரேக்க அரசு


(10) கீழே குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்களினை முன்வைத்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


1. சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத பிரஜைகள் மற்றும் குடிகள் மீது செலுத்தப்படும் அரசுக்குரிய உயர்வான அதிகாரம் - மெக்ஸ் வெபர்


2. நபர்களின் அரசியல் உரிமையை பாதுகாப்பதற்காக அரச அதிகாரமானது மிகவும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட வேண்டும். - அரிஸ்டோடில்



இது போன்று தினமும் வினா விடைகளை அறிந்துகொள்ள 

edulanka1to13.blogspot.com என்ற link இனூடாக தினமும் எமது website ஐ பார்வையிடவும்.

Post a Comment

0 Comments